Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

உன்னைப் போல்
சிறந்தவள் இல்லை என்கிறீர்கள்
அவள் திரும்பிப் பார்க்கிறாள்

எங்கே உன் சுதந்திரம் என்கிறீர்கள்
அவள் யோசனையாய்
புருவம் உயர்த்துகிறாள்

பெண்ணுக்கு விடுதலை
வேண்டுமென்கிறீர்கள்
அவள் ஆமாம் என்கிறாள்

பெரியார் என்ன செய்தார் தெரியுமா?
என கேள்விக் கேட்டு
மனதுக்கு தூண்டிலிடுகிறீர்கள்

பின் பாலியல் சுதந்திரம் என்கிறீர்கள்
பலரோடு படு என்கிறீர்கள்
என்னோடும் என பல்லிளிக்கிறீர்கள்

கணவன் கூடாது
குழந்தை வேண்டாம் என்கிறீர்கள்
சின்னவீடாகவோ வேசியாகவோ மாற்றுகிறீர்கள்

போஸ்ட் மாடனிசம்
கட்டற்ற பாலியல் சுவையை அனுபவிக்க
விளம்பரம் செய்கிறீர்கள்

அவளை காமத்தில் திளைக்க வைத்து
மூளையை மழுங்க செய்து
சந்தைப் படுத்துகிறீர்கள்

அவர்களை
உரிமைகளை கேட்கும் திறனற்றவர்களாக்கி
போதையிலும் காமத்திலும் மூழ்கடித்து
சந்தை விரிவாக்கத்தை
செவ்வனே செய்கிறீர்கள்

வீட்டை துறந்து
வீதியடைந்து
போராடும் பெண்ணை
போராட்டம் வேண்டாம்,
மதுவை குடித்துவிட்டு
கவிதை எழுது என்கிறீர்கள்

ரோசா லக்சம்பர்க்கையும்
கிளாரா ஜெட்கினையும்
அலெக்சாண்ரா கோலோண்டாயையும்
யாரோ என்கிறீர்கள்

லெனினோடு விவாதம் செய்ய தத்துவம் படிக்கவா என்கிறவளுக்கு
கட்டவிழ்க்கப்பட்ட ஆடைகளும்
கவிழ்க்கப்பட்ட கோப்பைகளும் போதும் உனக்கு என்கிறீர்கள்

எச்சரிக்கை

பெண் மனங்கள் இறுகிக்கிடக்கிறது
கிடந்துவிட்டுப் போகட்டும்

பெண் அடைந்துக் கிடக்கிறாள்
அடைந்து கிடக்கட்டும்

பேசாதிருங்கள்
உங்கள் நாவுகளை உள்ளிழுத்துக் கொள்ளுங்கள்
முதலாளிகளுக்கு கூட்டிக்கொடுக்கும்
நீங்கள் கண்டறியப்பட்டிருக்கிறீர்கள்.

உங்களை எங்கள் ஆய்ஷா ரீனா
கைகளை நீட்டி எச்சரிப்பாள்

ஸ்ரேயா பிரியம் ராய் பூக்களை கொண்டல்ல,
செருப்பாலே அடித்து வரலாறுப் படைப்பாள்

தாய்மை மறுக்கும்
உங்கள் வாதம் நசியாவிடம் எடுபடாது
அவள் உங்களை சாணியில் முக்கியெடுக்கலாம்

எச்சரிக்கை
உங்களை தோலுறிக்க
எங்கள் பெண்கள்
கிளம்பி விட்டார்கள்

சோசலிசத்தையும்
கம்யூனிசத்தையும் கையிலெடுப்பார்கள்

பின் வாசல் வழியாக நுழைந்த உங்கள் பின் நவீனத்துவம் பிடறியில் தெறிக்க ஓடட்டும்

– ஜீவா

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *