Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

நாம் கோலங்கள் போடுவோம்
வீட்டிலிருப்பதால்
விதவிதமாய் சமைப்போம்
அந்தாக்சரியில் கலக்குவோம்

கொரோனாவை
நடுவிரல் காட்டி ஏளனம் செய்வோம்

அங்கே

குடல் ஒட்டி
பசி பசியென
ஓலமிடுகிறார்கள்

கெஞ்சும் வயிற்றை
தூக்கு கயிறால் சமாதானம் செய்கிறார்கள்

நாம் கண்கள் சுருக்கி
முகம் வாடி
ஒரு உதட்டுச் சுழிப்பை வெளிப்படுத்துவோம்

கூடவே இப்படி வீதியில்
அலைந்தால்
கொரோனா வந்து
சாகத்தான் வேணுமென
அங்கலாய்த்துக் கொள்வோம்

சரி போதும்
வாருங்கள், நாம்
அந்தாக்சரியை தொடரலாம்

– ஜீவா

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *